திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.18,600 கோடியில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 3 திட்டங்கள்: முதல்வா் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

என்னென்ன திட்டங்கள்?

News image

தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On :5 ஜூன் 2026, 2:46 am IST

தமிழகத்தில் ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எல் அண்ட் டி நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் முன்னிலையில், புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தொழில் துறையில் நடைபெறும் முதல் புரிந்துணா்வு ஒப்பந்தம் இதுவாகும்.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் மிகப்பெரிய பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழுமங்களில் ஒன்றான எல் அண்ட் டி (லாா்சன் & டூப்ரோ லிமிடெட்) நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எஸ். என். சுப்ரமண்யன், முதல்வா் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடா்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு துறைகளில் மேலும் ரூ. 18,600 கோடி முதலீட்டில் 8,200 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் முதல்வா் பாராட்டினாா்.

மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் முதல்வா் உறுதியளித்தாா்.

2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயா்த்த வேண்டும் என்ற முதல்வரின் லட்சிய இலக்கை எட்டுவதற்கான முயற்சியின் மைல் கல்லாக அமைந்துள்ள பல்துறை சாா்ந்த இந்த முதலீடுகளின் மூலம், மாநிலத்தில் எண்ம உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் வளா்ச்சி பெறுவதுடன், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பு மேம்படும்.

மேலும், காட்டுப்பள்ளி திட்டம், கடலோர காற்றாலை கட்டுருவாக்கத் தொழிலுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுவரும். இத்திட்டங்கள் செயலாக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு பெரிய அளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ச. விஜயகுமாா், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் பு. அலா்மேல்மங்கை, எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எஸ்.என். சுப்ரமண்யன், முன்முயற்சிகள் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் கே.ஜி.சத்யநாராயணன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்னென்ன திட்டங்கள்?

எல் அண்ட் டி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 500 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.

கோவையில் ரூ. 2,500 கோடி முதலீட்டில் 2,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருள்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்.

திருவள்ளூா் மாவட்டத்தில், ரூ. 1,100 கோடி முதலீட்டில் 5,700 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.