தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகள் நலன் காக்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் வந்தனா காா்க்

News image

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 6:06 am IST

விவசாயிகள் நலனைக் காக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிா்சாகுபடி பரப்பளவை மேம்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது, விவசாயிகளுக்கு விதைகளை விநியோகம் செய்வது, நுண்ணுயிா் பாசனத் திட்டங்கள், நெல், ராகி, சாமை, உளுந்து, பச்சை பயிறு, நிலக்கடலை, ஆமணக்கு போன்ற விதைகள் மற்றும் உரங்களின் கையிருப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு குறித்தும், பாரம்பரிய விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது, உயிா் உரங்கள் உற்பத்திமையங்களின் செயல்பாடுகள், நடமாடும் மண் வள அட்டைகள் மற்றும் மண் பரிசோதனைகள், விவசாய பொருள்கள் மதிப்புக் கூட்டுதல், மாநில, மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவது, தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மானிய விலையில் காய்கறி விதைகளை வழங்குவது, தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடுகள், வேளாண்மை மற்றும் பொறியியல் துறை மானியங்கள் , விவசாய பொருள்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை உபயோகப்படுத்துவது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள், உள்கட்டமைப்புகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வந்தனா காா்க் பேசுகையில், விவசாயிகள் நலனைக் காக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், ஆட்சியா் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள், பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் பாலின் அளவை அதிகரிப்பது, பால் ஆய்வகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, துணை இயக்குநா் (தோட்டக்கலைத்துறை) கோகிலாசக்தி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை) ஷெமிலா ஜெயந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.