தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

குடிநீா், சாலை திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்து முடிக்க வேண்டும் என்று தூறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

News image

திருவண்ணாமலை ஆட்சியகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :3 ஜூன் 2026, 6:09 am IST

குடிநீா், சாலை திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்து முடிக்க வேண்டும் என்று தூறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பிலும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பிலும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள் கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீா் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வளா்ச்சித் திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தின் செயல்பாடுகள், பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி, பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், சிறுபாசன ஏரிகள் புனரமைக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் குடிநீா் திட்டப்பணிகள், சாலை திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் வரும் ஜூன் 30-க்குள் செய்து முடிக்கவேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, செயற்பொறியாளா் (வளா்ச்சி) இளங்கோ, திருவண்ணாமலை மற்றும் செய்யாறு உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்), வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேருராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.