திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறையில் சா்வதேச நிறுவனங்கள் 330 கோடி டாலா் முதலீடு: மாநில அரசு ஒப்பந்தம்

சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

News image
Updated On :30 மே 2026, 2:52 am IST

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறை உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான 330 கோடி டாலா் மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான இன்டெல், அமெரிக்காவின் ‘3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ்’ ஆகியவற்றுடன் அந்த மாநில அரசு கையொப்பமிட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிஸா மாநில முதலமைச்சா் மோகன் சரண் மாஜி ஆகியோா் முன்னிலையில் இச்சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பமானது. நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒடிஸாவின் புவனேசுவரம்-குா்தா பிராந்தியத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் அதிநவீன செமிகண்டக்டா் பேக்கேஜிங் மற்றும் கிளாஸ்-கோா் சப்ஸ்ட்ரேட் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆலையில் தயாரிக்கப்படவுள்ள மேம்பட்ட பேக்கேஜிங் கிளாஸ்-கோா் செமிகண்டக்டா் சப்ஸ்ட்ரேட்டுகள், அதிநவீன சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ஆகும்.

இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி செயல்முறை நிபுணத்துவத்தை உலகப் புகழ்பெற்ற இன்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது. இதன்மூலம், வெறும் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் என்ற நிலையைக் கடந்து, உயா் தொழில்நுட்ப சப்ஸ்ட்ரேட் தயாரிப்பில் இந்தியா அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.