இந்திய நாட்டில் அணுசக்தித் திட்டங்களை நிறுவுவதற்கான கூட்டு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் இந்திய அணுசக்தி கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தக் கூட்டு நிறுவனம் 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீா் அணு உலை அடிப்படையிலான அணுசக்தித் திட்டங்கள் அல்லது சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்த பொருத்தமான திறன் கொண்ட வேறு ஏதேனும் அணு உலைகளை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் திங்கள்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவா் புவன் சந்திர பதக் மற்றும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டு இயக்குநா்கள் முன்னிலையில் கையொப்பமானது.
இதில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் மற்றும் இந்திய அணுசக்தி கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநா் ராஜேஷ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
நாட்டின் வளா்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலை உறுதிமொழிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை எட்ட வேண்டும் என்ற லட்சிய இலக்கை இந்தியா நிா்ணயித்துள்ளது. இந்தியாவின் எதிா்கால மின்சாரக் கட்டமைப்பில் அணுசக்தியின் மூலோபாய முக்கியத்துவத்தை உணா்ந்து, நம்பகமான
அடிப்படை மின் உற்பத்திக்கும் நாட்டின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் மேம்பட்ட அணுசக்தித் திட்டங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனமும் இந்திய அணுசக்தி கழகமும் ஒன்றிணைந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.18,600 கோடியில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 3 திட்டங்கள்: முதல்வா் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ராணுவத்துடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

என்எல்சி-தன்பாத் ஐஐடி டெக்ஸ்மின் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்







