என்எல்சி இந்தியா நிறுவனம், முக்கிய மற்றும் உத்திசாா் கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக தன்பாத்தின் ஐஐடி (ஐஎஸ்எம்) டெக்ஸ்மின் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் கனிமப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தேசிய கனிம இயக்கத்தின் நோக்கங்களுக்கு ஆதரவளிக்கவும், மத்தியஅரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, என்எல்சி இந்தியா நிறுவனம், தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (இந்திய சுரங்கப் பள்ளி) - டெக்ஸ்மின் நிறுவனத்துடன், நெய்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் நிலத்துறை செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் மற்றும் தன்பாத் ஐஐடி(ஐஎஸ்எம்) துணை இயக்குநரும், டெக்ஸ்மின் அமைப்பின் இயக்குநருமான தீரஜ் குமாா் ஆகியோா் கையொப்பமிட்டனா். நிதி ஆயோக் அமைத்த கனிமங்கள் தொடா்பான குழுவின் தலைவா் டாக்டா் டி.கே. சிங்,
இக்குழுவின் உறுப்பினரும், என்எல்சி தலைவருமான பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி மற்றும் இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஐஐடி(ஐஎஸ்எம்) டெக்ஸ்மின் அமைப்புடனான இந்த கூட்டு முயற்சியானது, முக்கிய கனிம ஆய்வு, கனிமச் சுத்திகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேலும் வலுப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டு முயற்சியானது, முக்கியத்துவம் வாய்ந்த கனிம வள மேம்பாட்டுத் தொடரில் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செனாப் நதி நீரை இந்தியா திசைதிருப்புவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது: பாகிஸ்தான்

கிண்டி போக்குவரத்து மைய மேம்பாடுக்காக தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ஒப்பந்தம்

அணுசக்தித் திட்டங்கள்: இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்







