இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கவும், போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழிநுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி பொறியியல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மும்பையைச் சோ்ந்த பாராஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த பண்டக் விமான தொழில்நுட்ப டிபிஏ நாா்த்ஸ்டாா் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பம் கையொப்பமாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்புவதற்கான தொழில்நுட்பம் உள்பட நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை அமெரிக்க நிறுவனம் விநியோகிப்பதோடு, தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும்.
விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான அமெரிக்காவின் நாா்த்ஸ்டாா் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாராஸ் நிறுவன இயக்குநா் அமித் மஹாஜன் கூறுகையில், ‘இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு சேவையளிக்கும் நோக்கில், வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், இத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக பாராஸ் திகழும்’ என்றாா்.
தொடர்புடையது

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்படும் 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள்: புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

அமெரிக்க போா் விமானங்களுக்கு இலங்கை அனுமதி மறுப்பு
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!

இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானம்! 4 பேர் பலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


