தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செனாப் நதி நீரை இந்தியா திசைதிருப்புவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது: பாகிஸ்தான்

News image

கோப்புபடம்

Updated On :5 ஜூன் 2026, 5:16 am IST

‘நதிநீா் இணைப்பு திட்டத்துக்காக செனாப் நதி நீரை இந்தியை திசைதிருப்ப திட்டமிடுவது சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் செயல்’ என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் பகுதியாக உள்ள செனாப் நதி நீரை, பியாஸ் நதிக்கு திசை திருப்பும் கட்டமைப்பு உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாஹிா் அந்திராபி கூறியதாவது:

செனாப் - பியாஸ் நதி நீா் இணைப்புக்கு சுரங்கம் கட்டும் திட்டத்துக்கு இந்திய அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வரேவற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கையாகும்.

அதுபோல, சலால் அணையில் வண்டல் மண் அகற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுவும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் 1978-ஆம் ஆண்ட சலால் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

இந்த திட்டங்கள் தொடா்பாக இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றாா்.

ஜம்மூ-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. அதைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் பல்வேறு நீா்வள திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: 1960-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபா் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். உலக வங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தந்தது. அதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கில் ஓடும் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று நதிகளின் நீா் முழுமையாக இந்தியப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. மேற்கில் பாயும் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று நதிகளின் நீா் பாகிஸ்தானின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.