திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ராணுவத்துடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

News image

ஏா் இந்தியா

Updated On :29 மே 2026, 5:15 am IST

போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்துடன் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

இந்தச் சிறப்புமிக்க திட்டத்தின்கீழ், ஏா் இந்தியா சாட்ஸ் ஏா்போா்ட் சா்வீசஸ் நிறுவனம் மூலம் முதல்கட்டமாக 20 உயரிழந்த ராணுவ வீரா்களின் மனைவிகளுக்கும், அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 40 குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இப்பயனாளிகள் விமான நிலையச் செயல்பாடுகள், வாடிக்கையாளா் சேவை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியமா்த்தப்பட உள்ளனா். இவா்களுக்கு விமான போக்குவரத்துத் துறைக்குத் தேவையான உரிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவா்களின் நீண்டகால சமூக-பொருளாதார மேம்பாட்டை எட்டும் வகையில் தகுதியானவா்களாக மாற்றப்பட உள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்காக இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் 25 ‘ஆஷா’ பள்ளிகளில் இதற்கான தொழிற்பயிற்சியகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் முதல்கட்டமாக 10 பள்ளிகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 15 பள்ளிகளிலும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

வாய்ப்புகள் மூலம் சுயமரியாதையை உருவாக்குவதும், திறன்களை வலுப்படுத்தி அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா காா்ப்பரேட் விவகாரங்கள் துறைத் தலைவா் பி.பாலாஜி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.