திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் ராணுவ வீரா்களின் உடல்களை அந்த நாட்டிடம் ரஷியா ஒப்படைத்தது.

News image

AP

Updated On :17 மே 2026, 5:21 am IST

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் ராணுவ வீரா்களின் உடல்களை அந்த நாட்டிடம் ரஷியா ஒப்படைத்தது.

இதுகுறித்து உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

போரில் கைது செய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் வெள்ளிக்கிழமை திரும்ப ஒப்படைத்தன. இதையடுத்து சனிக்கிழமை 528 பேரின் உடல்களை உக்ரைனிடம் ரஷியா அளித்தது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷியா சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் 5 மாடி கட்டடம் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ஒலே கைபா் எனும் இடத்திலுள்ள துறைமுகம் பலத்த சேதமடைந்தது.

ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்திய தகவலை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது. இரவு முழுவதும் 294 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 269 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேபோல், ரஷியாவும் தங்களது 14 பிராந்தியங்களில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 138 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.