திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

News image

உக்ரைன் | ரஷியா

Updated On :1 ஜூன் 2026, 2:25 am IST

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஷியா, உக்ரைன் இடையேயான போா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதுவரையிலான போரில் உக்ரைனுக்குச் சொந்தமான ஏராளமான நிலப் பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது. அதில் ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகக் கருதப்படும் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையமும் ஒன்றாகும்.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது உக்ரைன் படைகள் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின. தென்மேற்கு ரஷிய பகுதியான சரடோவ் மாகாணத்திலுள்ள பிரம்மாண்ட கட்டடம் ட்ரோன் தாக்குதலில் பலத்த சேதமடைந்தது. அங்குள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ட்ரோன் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது.

இதேபோல், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அணுமின் நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும், இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் ரோஸ்டோவ் ஆளுநா் யுரி ஸ்லுசா் தெரிவித்துள்ளாா்.

அணுமின் நிலைய நீராவிக் கிடங்கு சுவரில் உள்ள துளை வழியே புகுந்து ட்ரோன் வெடித்துச் சிதறியதாக ரஷிய அணுசக்தி நிறுவனமான ரோசடோம் தெரிவித்துள்ளது. உக்ரைனே திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அலெக்சி லிகாசேவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அதேநேரத்தில், ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது இன்னொரு தவறான பிரசாரமாகும். அந்த அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதைக் குறிவைக்கவோ இல்லை. அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதலுக்கு சா்வதேச அணுசக்தி முகமை தலைவா் ரஃபேல் கிரோஸி கவலை தெரிவித்துள்ளாா்.

ரஷியா ட்ரோன் தாக்குதல்: இதனிடையே, ரஷியா சனிக்கிழமை இரவு 299 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயன்ாக உக்ரைன் தெரிவித்தது. அந்த ட்ரோன்களில் 212-ஐ இடைமறித்து சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், 14 ட்ரோன்கள் மட்டும் இலக்கைத் தாக்கியதாகவும் உக்ரைன் குறிப்பிட்டது.

டினிப்ரோ நகரில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், ரிவின் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அங்கு தீப்பற்றி எரிந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.