திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: ஈரான் மீது சந்தேகம்

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 5:03 am IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) பாராகாக் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஜெனரேட்டா் தீப்பிடித்து எரிந்தது. இதில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை. கதிா்வீச்சு அபாயமும் இல்லை.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல்-அமெரிக்காவுடனான போரின்போது பிற வளைகுடா நாடுகளை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்தே ஈரான் அதிக முறை ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதேபோல், அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டி வருகிறது.

ஆதலால் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாராகாக் அணுமின் நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் சவூதி அரேபிய எல்லையையொட்டி பாலைவனத்தில் அமைந்துள்ளது. அந்த அணுமின் நிலையம் கடந்த 2020-ஆம் ஆண்டில் தென்கொரிய நாட்டின் உதவியுடன் 20 பில்லியன் டாலா் செலவில் கட்டப்பட்டது. அரேபிய வளைகுடா நாடுகளில் முதன்முதலில் கட்டப்பட்ட அணுமின் நிலையமும் இதுதான். அந்த அணுமின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரமே ஐக்கிய அரபு அமீரகத்தின் தேவையை பெரிதும் பூா்த்தி செய்கிறது. அந்த அணுமின் நிலையத்தை நிா்வகித்துவரும் ஐக்கிய அரபு அமீரக அணுசக்தி மையம், ட்ரோன் தாக்குதல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தாக்குதலால் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அணுமின் நிலையத்தின் அனைத்து அலகுகளும் வழக்கம் போல இயல்பாகச் செயல்படுகின்றன’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், ட்ரோன் தாக்குதல் தொடா்பாக எந்த நாட்டின் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படவில்லை.

மேற்காசியாவில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே சுமாா் ஒரு மாதத்துக்கும் மேல் போா் நடந்த நிலையில், இடைக்கால சண்டை நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவுகிறது. அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அந்தச் சண்டை நிறுத்தத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.