கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்... அழைக்கிறது கோல் இந்தியா நிறுவனம்
இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு


இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 528
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Medical Specialist in E4 Grade
பணி: Medical Specialist in E3 Grade
காலியிடங்கள்: 172
தகுதி: இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகம், அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்
பணி: Sr.Medical Officer in E3 Grade - 86
தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: Sr. Medical Specialist பணிக்கு 01.04.2018 தேதியின்படி 42க்குள்ளும், Medical Specialist மற்றும் Sr.Medical Officer பணிகளுக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018
மேலும் சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.coalindia.in/DesktopModules/DocumentList/documents/Detailed_Advertisement_27062018.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...