2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:30 am

Syndication

மக்காச்சோளத்தை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை கோரி, கோவில்பட்டியில் உள்ள சாா் ஆட்சியா் அலுவலகம் முன் தேசிய விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்காச்சோளத்துக்கு மத்திய அரசு ஆதார விலையாக ரூ. 2,400 நிா்ணயித்துள்ள நிலையில், தனியாா் வியாபாரிகள் ரூ. 1,600-க்கு கொள்முதல் செய்வதைத் தடுப்பதுடன், அவா்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வியாபாரிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் விவசாய அமைப்புகளைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். மக்காச்சோள ஏற்றுமதிக்கான தடையை அகற்றுவதுடன், அதிகமாக உற்பத்தியாகும் மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அய்யலுசாமி, கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க முன்னாள் தலைவா் ராஜேஷ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வில்லி சேரி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் காசிராஜன், ஆடு வளா்ப்போா் சங்க மாநிலத் தலைவா் கருப்பசாமி, தோணுகால் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சுந்தர்ராஜ், திரளானோா் பங்கேற்றனா். பின்னா் அவா்கள் சாா் ஆட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் மகாராஜனிடம் மனு அளித்தனா்.