டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டம் நடத்திய வழக்குரைஞா்கள்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சா. விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைச் செயலா் ஐயப்பன், முன்னாள் துணைத் தலைவா் செந்தில்குமாா் முன்னாள் செயலா் தரணிதரன், முன்னாள் செயலா் செல்வம், மூத்த வழக்குரைஞா் ஜெயபால், கென்னடி கண்ணன், மகேஷ், இளங்கோவன், காஸ்பரோவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.