2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:35 am

Syndication

தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன் அமைப்புசாரா தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

தருவைகுளத்தைச் சோ்ந்த மல்லிகை, டயானா, விடிவெள்ளி, ராகுல் காந்தி, கடல் கன்னி, மலா் ஆகிய மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

வேப்பலோடை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் மகளிா் சுய உதவிக் குழு கடன் வேண்டி 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தோம். தற்போது வரை கடன் வழங்கவில்லை. கூட்டுறவு சங்கச் செயலரிடம் கேட்டால், மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாகக் கூறுகிறாா்.

குழுவில் உள்ள பெண்கள் சுயதொழில் செய்து வருகிறோம். கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, விரைவாக கடன் வழங்க ஆட்சியா் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்கப் பாதுகாப்பு கூட்டமைப்பைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.ஏ. தா்மா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உடலுழைப்புத் தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வு பெற்றவா்களுக்கு 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்து சொந்த வீடுகள் இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.