பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிக்யூடிவ் வேலை
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பெமல்) நிறுவனத்தின் ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிக்யூடிவ் பிரிவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பெமல்) நிறுவனத்தின் ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிக்யூடிவ் பிரிவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஹெவி எக்விப்மென்ட் அசெம்பிளி, சாப் பர்சேஸ் மாடுயூல், ஆட்டோ காட், சாலிட் ஒர்க்ஸ், லேட்டஸ்ட் டிசைன் சாப்ட்வேர், எம்.எஸ்.க்யூ.ஏ.ஏ., டி.ஆர்.டி.எல்., பி.டி.எல்., போன்றவற்றில் திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
திறனறியும் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தங்களைப்பற்றிய சுய விவரங்களுடன் (சி.வி) தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Asst.General Manager (HR),Recruitment Cell,BEML Soudha, No.23/1, 4th Main Road, S.R Nagar, Bangalore -560027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 18-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bemlindia.com/Writereaddata/Career/Advt_KP_S_05_2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...