லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் காஸா இனப் படுகொலையை பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தல்

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 4:18 am

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் காஸா இனப் படுகொலையை பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக இன்று (பிப். 25) இஸ்ரேலுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றம் நெஸட்டில் உரையாற்றும்போது காஸாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இனப் படுகொலை குறித்து நீதி கோருவார் என்று நம்புகிறேன்.

சுதந்திர நாடான இந்தியா, தனது வரலாறு முழுவதும் நியாயத்தின் பக்கமே நிற்கிறது.

நாம் தொடர்ந்து உண்மை, அமைதி, நீதியின் ஒளியை உலகுக்குக் காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு செல்வதற்குமுன் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த சில ஆண்டுகளில் இந்தியா - இஸ்ரேல் உறவுகள் கணிசமாக வலுவடைந்துள்ளன. நான் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன், அதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்போம். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் சந்திக்கவுள்ளேன்.

தொடர்ந்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸட்டில் உரையாற்ற உள்ளேன். இது நம்மை இணைக்கும் வலுவான நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக உறவுகளுக்கு மரியாதை செலுத்துவதாகும். இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கிய இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோருடனும் கலந்துரையாடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இஸ்ரேலிய நாடாளுமன்றம் நெஸட்டில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான்.

Summary

Hope PM Modi mentions genocide in Gaza while addressing Knesset: Congress MP Priyanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.