மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது குறித்து...

News image

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 7:27 am

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்.8) ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது குறித்த பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்த திடீர் முடிவு, அவரது நிர்வாகத்தில் ஏற்பட்ட பெரும் தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் மூடிமறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2024 தேர்தலிலிருந்தே ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’ சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை நிராகரித்ததற்காக பிரதமர் மோடி, இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Congress on Friday alleged that Prime Minister Modi must apologize to Indian women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.