நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: கார்த்தி சிதம்பரம்

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 2:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளருடன் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, மிகப்பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினை பாராட்ட வேண்டும்.

இந்த பெரிய அமைப்பு ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்போது, மற்ற இரண்டு அல்லது மூன்று அமைப்புகளைவிட முன்னிலையில் இருக்கும்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இது திமுகவுடன் எங்களுக்கு இருக்கும் நீண்டகால உறவு. நாங்கள் (காங்கிரஸ் - திமுக) 2004 முதல் ஒன்றாக இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் சோனியா காந்தி உருவாக்கிய கூட்டணி. இது காலத்தின் பல்வேறு சோதனைகளிலிருந்து தப்பி வந்துள்ளது.

2014 தேர்தலைத் தவிர, ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஒன்றாகவே போட்டியிட்டுள்ளோம். எந்தவொரு உறவிலும் சிறிய உராய்வு இருக்கத்தான் செய்யும். மேலும், இந்த உராய்வு நியாயமானதாகவும் இருக்கும்.

ஆனால், அவையனைத்தும் எளிதில் சமாளிக்கப்படுகின்றன. நாம் ஒன்றாகத் தேர்தல்களைச் எதிர்கொள்ளும்போது அனைத்தும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.