மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து...


சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினரின் தொடர் காத்திருப்பு போராட்டம் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் கட்டடம் முன்பு புதன்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், பேராசிரியா் முத்துவேலாயுதம், பேராசிரியா் இளங்கோ உள்ளிட்ட பலா் பேசினாா்கள்.
துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம், பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயா்வுகள், பணப்பயன்கள், ஓய்வு பெற்றவா்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம், தொடா் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அண்மையில் தமிழக அரசு கூட்டமைப்பு பொறுப்பாளா்களை முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பேசியது. அதில், எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் புதன்கிழமை(பிப்.25) முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் மீண்டும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...