நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய விமான ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணி

இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான 147 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:03 am

ஆர். வெங்கடேசன்

இந்திய விமான ஆணையத்தில் தீயணைப்பு பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான 147 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Airport Authority of India

மொத்த காலியிடங்கள்: 147

பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி. ஆந்திரா, தெலங்கனா, கர்நாடகா, கேரளா, லட்சசீவுகள்

பணி: இளநிலை உதவியாளர் (தீயணைப்பு துறை) - Junior Assistant (Fire Department)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்பளமோ அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு - 33க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் பொறுமைக்கான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: திருச்சி, ஹைதராபாத், மங்களூரு, திருவனந்தபுரம், அகத்தி  
தேர்வுக்கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.airportsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 Regional Executive Director,
Airports Authority of India,
Southern Region,
Chennai – 600027.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2017

முழுமையான விவரங்கள் அறிய www.airportsindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.