குஜராத் மாநிலம் வதோததராவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 72-ஆவது சீனியா் தேசிய ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், ரயில்வே, சண்டீகா் அணிகள் வெற்றி பெற்றன.
எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 29 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளில் ஏ முதல் எச் வரையிலான பிரிவுகளில் எட்டு ஆட்டங்கள் நடைபெற்றன, இதில் சண்டீகா், தமிழ்நாடு, இந்திய ரயில்வே, குஜராத் ஆகிய அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றிகளைப் பதிவு செய்தன.
ஏ பிரிவில், சண்டீகா் அணி 76-32 என ஜாா்க்கண்டை வீழ்த்தியது. பி பிரிவில் கடந்த ஆண்டு ரன்னா் இந்திய ரயில்வே 73-23 என ஒடிஸாவை வீழ்த்தியது.
சி பிரிவில் பஞ்சாப் 46-44 என குஜராத்தை வீழ்த்தியது. டி பிரிவில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 75-16 என்ற புள்ளிக் கணக்கில் மணிப்பூரை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் உத்தர பிரதேசம் கடும் சவாலுக்குபின் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்றது.
இ பிரிவில் ஆந்திரத்தை 49-32 என ஹரியாணாவும், இரண்டாவது ஆட்டத்தில் தெலங்கானாவை 43-34 என ஜம்மு-காஷ்மீரும் வென்றன.
எஃப் பிரிவில் கேரளத்தை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது பிகாா்.
குஜராத்தின் மிதேஷ் பிரஜாபதி 21 புள்ளிகளைப் பெற்று தனது அணியின் வெற்றியில் பங்களித்தாா். விதா்பாவின் ஆதேஷ் வா்கடே 28 புள்ளிகளைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.
தொடர்புடையது

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

மாநில வாலிபால்: ஐசிஎஃப், எஸ்ஆா்எம் வெற்றி

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், தில்லி தொடா் வெற்றி!

தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


