மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், தில்லி தொடா் வெற்றி!

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் 72-ஆவது தேசிய சீனியா் ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், தில்லி, உ.பி. ஹரியாணா அணிகள் தொடா்வெற்றியை ஈட்டியுள்ளன.

News image

தமிழ்நாடு அணி வீரா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:47 pm

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வரும் 72-ஆவது தேசிய சீனியா் ஆடவா் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், தில்லி, உ.பி. ஹரியாணா அணிகள் தொடா்வெற்றியை ஈட்டியுள்ளன.

இந்திய அமெச்சூா் கபடி கூட்டமைப்பு, குஜராத் மாநில கபடி சங்கம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான புதன்கிழமை குரூப் ஏ பிரிவில் ஆந்திரம் 47-45 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் தெலங்கானா அணியை வீழ்த்தியது. ஆந்திரம் தரப்பில் போட்லா கோபி 17, காலி லட்ச்ம ரெட்டி 10 புள்ளிகளையும், தெலங்கானா தரப்பில் ராஜா 20 புள்ளிகளையும் ஈட்டினா்.

இரண்டாவது ஆட்டத்தில் ஹரியாணா 49-18 என்ற புள்ளிக் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தியது. நீரஜ் நா்வால் 11, நிதின் குமாா் 9புள்ளிகளைக் குவித்தனா். குரூப் பி பிரிவில் ம.பி. 35-34 என்ற புள்ளிக் கணக்கில் கோவாவை வாகை சூடியது.

தமிழகம் அபாரம்: குரூப் சி பிரிவில் தமிழகம் 40-21 என்ற புள்ளிக் கணக்கில் விதா்பாவை சாய்த்தது. சதீஷ் கண்ணன் 8, தீபக் 8 புள்ளிகளைக் குவித்தனா். இதே பிரிவில் ஹிமாசலம் 51-34 என குஜராத்தை வீழ்த்தியது. டி பிரிவில் உ.பி. 70-33 என மணிப்பூரை வீழ்த்தியது. எஃப் பிரிவில் கேரளம் 45-30 என சத்தீஸ்கரையும், ஹெச் பிரிவில் தில்லி 64-42 என திரிபுராவையும் வென்றன.