இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வானிலை ஆய்வு மையத்தில் அறிவியல் உதவியாளர் வேலை

வானிலை ஆய்வு மையத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள அறிவியல் உதவியாளர் குரூப் "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

ஆர். வெங்கடேசன்

வானிலை ஆய்வு மையத்தில் 2017-18 ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள அறிவியல் உதவியாளர் குரூப் "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி முடிவடைவந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
பணி: Scientific Assistant (Group-B)

மொத்த காலியிடங்கள்: 1102

பணியிடம்: இந்தியா முழுவதும்

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தகுதி:  இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்ட  பி.எஸ்சி., பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற பிரிவுகளை இயற்பியலுடன் சேர்த்துப் படித்திருக்க வேண்டும். அல்லது  எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க
வேண்டும். +2வில் இயற்பியல்-கணிதம் படித்தவர்களாகவும் இருக்கவேண்டும்.

வயது வரம்பு: 04.08.2017 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகள், எஸ்ஸி., எஸ்டி., மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. (பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் இல்லை).

விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  20.11.2017 முதல் 27.11.2017  
விண்ணப்பிப்பதற்கான கடைசித்  தேதி:  14.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/NoticeIMDExamination_2017_18.07.2017.pdf -என்ற இணைய தள அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.