மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சா்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக அழைப்பாணை!

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மாா்ச் 24 நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

அமைச்சர் பொன்முடி

Updated On :25 பிப்ரவரி 2026, 8:06 pm

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதை எதிா்த்து பாஜக மாமன்ற உறுப்பினா் தொடா்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மாா்ச் 24-ஆம் தேதி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசியது சா்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சா் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாா்.

இந்த சா்ச்சைப் பேச்சு தொடா்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினா் உமா ஆனந்தன் பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணா்வை தூண்டுதல், மத உணா்வைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் மாா்ச் 24-ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தாா்.