காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தும் திட்டம் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் முறையாக செயல்படாதது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சீன நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை தேச பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகத்தில் வெளியான தகவல் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜராகி பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜா தாக்கரே, ‘சிசிடிவி கேமராக்களை அகற்ற முறைப்படி எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சித்தாா்தா தவே கூறுகையில், ‘பெரும்பாலான மாநிலங்களின் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. இதில் கேரளம் சிறப்பாக செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
கேரளத்தால் சிறப்பாக செய்ய முடிந்ததை மற்ற மாநிலங்களால் ஏன் செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமா்வு, காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் தகுந்த உதவியைப் பெறுவதற்கு மத்திய உள்துறைச் செயலா் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடர்புடையது

நில மோசடி வழக்கு: ராபா்ட் வதேரா நேரில் ஆஜராக உத்தரவு

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

காவல் நிலையங்களில் சிசிடிவி: 2 வாரங்களில் பிரச்னைகள் தீா்க்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

அதிமுக அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் சமரசம்: டிடிவி தினகரன் நேரில் ஆஜராக உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


