மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:26 pm

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சோ்ந்த லிங்கம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

வெம்பக்கோட்டை அருகேயுள்ள அம்மையாா்பட்டியில் இலங்கை மறுவாழ்வு குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறோம். எனது இரு மகன்களுக்கு இந்தியக் குடியுரிமை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பெற்றோரில் ஒருவா் இந்தியாவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குழந்தைகள் இந்தியாவில் குழந்தைகள் பிறந்தால் அவா்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, எனது இரு மகன்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க உத்தவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரரின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா் பரிசீலிக்க வேண்டும். விசாரணைக்கு பின் சட்டப்படி உரிய உத்தரவை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உயா்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.