கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய கடற்படையில் எஸ்.எஸ்.ஆர்- 2/2017 பிரிவில் பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் +2 முடித்தவர்களை மாலுமி பணியில்


இந்திய கடற்படையில் எஸ்.எஸ்.ஆர்- 2/2017 பிரிவில் பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் +2 முடித்தவர்களை மாலுமி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும்.
வயது வரம்பு: 01.08.1996 மற்றும் 31.07.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களைக் கொண்ட பிரிவில் மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகலை Post Box No.488, Cole Dak Khana, GPO, New Delhi 110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 26.12.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...