தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரௌபதி 2..! நமது மண்ணின் வரலாறென இயக்குநர் பெருமிதம்!
திரௌபதி 2 படத்தினைக் குறித்து இயக்குநர் கூறியதாவது...


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குறிப்பிட்ட பிரிவினரிடையே ஆதரவு பெற்றது.
தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார்.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையில் இயக்குநரே எழுதிய ’தாராசுகி ராம்’ எனும் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகியது.
ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நாளை வெளியாகவிருக்கிறது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
திரௌபதி 2 நமது மண்ணின் வரலாறு... வரலாற்றில் ஆவணமாக இருப்பதை காட்சிகளாகப் படம்பிடித்திருக்கிறோம். அதனால், இந்தத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள முடியும்.
மூன்றாம் வீர வள்ளால மகாராஜா, வீர சிம்ஹ கடவராயர் இந்தப் பொங்கலுக்கு வெள்ளித் திரைக்கு வருகிறார்கள்.
நாளை சனிக்கிழமை மாலை டிரைலர் வெளியாகும். டிரைலர் வெளியானதும் ஆட்டம் ஆரம்பம் எனக் கூறியுள்ளார்.
தேதி குறிப்பிடாமல் பொங்கலுக்கு வெளியாகுமென இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...