/

நெருப்பில் இருந்து பிறந்தவள்... திரௌபதி 2 பட க்ளிம்ஸ் விடியோ!

மோகன் ஜி இயக்கியுள்ள திரௌபதி 2 படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்து...

News image
திரௌபதி 2 படத்தின் காட்சி. - படம்: எக்ஸ் / மோகன் ஜி.
Updated On :10 ஜனவரி 2026, 8:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள திரௌபதி 2 படத்தின் டிரைலர் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இந்த விடியோவில் வரும் வசனம் சமூக வலைதளத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குறிப்பிட்ட பிரிவினரிடையே ஆதரவு பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

அந்த விடியோவில், “நெருப்பில் இருந்து பிறந்தவள் அந்த திரௌபதி... அந்தத் தீச்சுடரின் பெயரை எனக்கு வைத்ததன் காரணத்தை இன்று அறிவேன்...” என்ற வசனம் வெளியாகியுள்ளது.

இன்று மாலை 6.01 மணிக்கு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் இந்த வசனம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.