/

குத்துப் பாடலா? தெய்வீகப் பாடலா? எதிர்பார்ப்பைக் கூட்டும் திரௌபதி 2 பட பாடல்!

திரௌபதி 2 படத்தின் இரண்டாவது பாடல் குறித்து...

News image
திரௌபதி 2 படத்தின் இரண்டாவது பாடல் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் /
Updated On :6 ஜனவரி 2026, 3:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் குத்துப் பாடலாகவும் மறுபக்கம் தெய்வீக பாடலாகவும் இருக்கும் மாதிரியான இரண்டு விதமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குறிப்பிட்ட பிரிவினரிடையே ஆதரவு பெற்றது.

தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ’தாராசுகி ராம்’ எனும் இரண்டாவது பாடல் நாளை மாலை 5.02 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

An update has been released regarding the second song of the film Draupathi 2, directed by Mohan G.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.