நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் தொடர்பாக...

News image
Updated On :8 செப்டம்பர் 2025, 1:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

Story image

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திரைக்கு வரவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப். 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

summary

The release date of actor Vijay Antony's film Sakthi Thirumagan has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.