டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ. 200 கோடி வசூலித்த பிரபாஸின் தி ராஜா சாப்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜா சாப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்‌ஷன், ஹாரர் பாணியில் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் வெளியானது.

Story image

இந்தப் படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளே ரூ.112 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், 4 நாள்களில் ரூ. 201 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தி ராஜா சாப் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிப். 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date of the film 'The Raja Saab', starring actor Prabhas, has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.