டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் - 2 தொடர்!

எதிர்நீச்சல் - 2 தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...

News image
எதிர்நீச்சல் -2
Updated On :4 பிப்ரவரி 2026, 7:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரும் திங்கள்கிழமை முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும்.

புதிய தொடர் வருகையாலும் டிஆர்பியை கூட்டுவதற்காகவும் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

எதிர்நீச்சல், சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, ஆடுகளம் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) ஒளிபரப்பாகி வரும் நிலையில், இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் திருச்செல்வம். எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார்.

இவரைத் தவிர, எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்தில் இருந்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, கமலேஷ், விபு ராமன் ஆகியோர் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்ன திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடர் 4 பிரிவுகளில் விருதுகளுக்கு தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.