டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம்!

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக....

News image
எதிர்நீச்சல் தொடர் போஸ்டர்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) ஒளிபரப்பாகி வருகிறது.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் -2 தொடரின் மறுஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், அந்த நேரத்தில் எதிர்நீச்சல் - 2 தொடரை ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டு, இதற்கு பதிலாக காலை 8.30 மணிக்கு இதிகாச தொடரான ராமாயணம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகம் காலை 10.30 மணி வரை 11.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதேபோல சிங்கப்பெண்ணே தொடரின் மறுஒளிபரப்பு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

புதிய தொடர் வருகையாலும் டிஆர்பியை கூட்டுவதற்காகவும் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் மாற்றியமைத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.