டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்... ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
தலைவர் தம்பி தலைமையில் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜீவா.
Updated On :12 பிப்ரவரி 2026, 12:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவாவின் 45-ஆவது படமாக உருவான, ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தினை இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார்.

Story image

இதில், நாயகியாக பிரார்த்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரில், கரூர் பலியின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், ‘படிச்சு படிச்சு சொன்னேனே, கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கன்னு’ என பேசிய விடியோ வைரலானது.

பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

மேலும், இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வரும் பிப். 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The film's OTT release date has been officially announced Jeeva's thalaivar thambi thalaimaiyil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.