முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?

குஷி படத்தின் புரமோஷன் விடியோவினை விஜய் தேவரகொண்டா பகிர்ந்ததில் இருந்த பிழையை கண்டறிந்த ரசிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Story image

சமந்தா, நாக சைதன்யா வைத்து எடுக்கப்பட்ட ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Story image

சமீபத்தில் வெளியான குஷி படத்தின் டிரைலர், சமூக வலைதளங்களில் வைரலானது. குஷி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தாவுடன் விடியோ கால் பேசுவது போல விடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

Story image

“இது நிஜமான விடியோ கால் இல்லை. சமந்தா கண்ணாடியில் விடியோ பதிவு செய்வது தெரிகிறது. இந்த விடியோ எடிட் செய்யப்பட்டது” என ரசிகர் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கமெண்ட்டும் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.