கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

''கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை''.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ராவின் தாயார் உருக்கம்!

விஜே சித்ரா சித்ரா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அவரின் தாயார் ரசிகர்களுக்காக உருக்கமான விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

DIN


சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அவரின் தாயார் ரசிகர்களுக்காக உருக்கமான விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி, முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் சித்ராவின் தாயார் வெளியிட்டுள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற, சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

Story image

சித்ரா தாயார் உருக்கம்:

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி விஜே சித்ராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி முதியோர் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். 

அதனைத் தொடர்ந்து விஜே சித்ராவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ரசிகர்களுக்கு அவரின் தாயார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விடியோவில் அவர் பேசியதாவது,

Story image

சித்ரா மறைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு இன்னனும் பதில் கிடைக்கவில்லை. நான் உங்களுடன் பேசவேண்டும் என வெகு நாட்களாக காத்திருந்தேன். ஆனால், துக்கம் என்னை பேச விடாமல் செய்தது. விளையாட்டாக இருந்த பிள்ளை விளையாட்டாகவே சென்று விட்டது. 

ஆனால் சித்ராவுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க நீங்கள் எல்லோரும் பிராத்தனை செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு விஜே சித்ராவின் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.