/

தனுஷின் இரு புதிய படங்கள் அறிவிப்பு!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:46 am

எழில்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரின் அடுத்தப் படத்திலும் ராட்சசன் படத்தை இயக்கிய ராம் குமாரின் படங்களிலும் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ். துரை செந்தில் குமார் இயக்கும் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கவுள்ளார்கள். இரு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. 

தனுஷ் நடிப்பில் வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களில் சமீபத்தில் வெளிவந்தன. இதுதவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.