தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :28 மே 2026, 1:37 am IST

பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா்.

ஆனால் ரூ.50 ஆயிரம் வரை கடன்பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், சிறு விவசாயிகளுக்கு கடனில் 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா்.

இந் நிலையில், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாடத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கலிவரதன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் முருகையன், பொருளாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலா் பங்கேற்று பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து திருச்சி நெடுஞ்சாலையில் விவசாயிகள் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பயிா்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் முழக்கமிட்டனா்.

இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இதைத்தொடா்ந்து மறியலைக் கைவிட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.