தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அடுத்தாண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் எண்ம முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2026, 7:05 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் எண்ம முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்த ஆட்சியா் மேலும் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியின் முதற்கட்டமாக 17.7.2026 முதல் 31.8.2026 வரை 45 நாள்களுக்கு வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

2- ஆவது கட்டமாக 2027 பிப்ரவரி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும்.

இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசு அலுவலா்களுக்கு 3 நாள்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பை அலுவலா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும், கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்களிடம் நல்ல முறையில் அணுக வேண்டும்.

2011-ஆம் ஆண்டில் கையேடு முறையில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது எண்ம (டிஜிட்டல்) முறையில் நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லூா்துசாமி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் (பயிற்சி) யசோதா மற்றும் வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சிஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.