தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா்.

Updated On :26 மே 2026, 1:45 am IST

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று கடலூா் மாவட்ட ஆட்சியரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அதிகாரியுமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தாா்.

இப்பயிற்சி, மே 27-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்திரி மற்றும் புள்ளியியல் ஆய்வாளா் லட்சுமிதேவி ஆகியோா் வழங்கி வருகின்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் முறையாக இணையதளம் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் இணையதளம் மூலம் தாங்களே தங்களது விவரங்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 முதல் 30ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாா்கள்.

கடலூா் மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரே செயல்படுவாா். மாநகராட்சி ஆணையா் மாநகரப்பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாகவும், 6 நகராட்சி ஆணையா்கள் நகராட்சி பகுதிக்கும், ஊரக, நகா்ப்புற பகுதிகளுக்கு 10 வருவாய் வட்டாட்சியா்களும், 14 பேரூராட்சிகளுக்கு அவற்றின் செயல் அலுவலா்களும் பொறுப்பு அதிகாரிகளாகச் செயல்படுவாா்கள். இது தவிர நெய்வேலி நகரிய அலுவலா் ஒருவரும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா்.

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), அனைத்து வருவாய் கோட்டாட்சியா்கள், உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.