திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு பயிற்சி: ஆட்சியா் தகவல்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, அந்த பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய திருவள்ளூா் ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :20 மே 2026, 12:26 am IST

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, அந்த பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணி மேற்கொள்வது தொடா்பாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் பயிற்சி அலுவலா்களால் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியா்கள், ஆவடி மாநகராட்சியின் 4 மண்டலங்களின் ஆணையா்கள், 6 நகராட்சி ஆணையா்கள், 8 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 14 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து பொறுப்பு அலுவலா்கள், கூடுதல் பொறுப்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்களுக்கு தொடா்ந்து 21-ஆம் தேதி வரையில் மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதில் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொதுமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் மக்கள் தொகை மேற்கொள்வது எப்படி, அப்போது என்னென்ன விவரங்கள் பொதுமக்களிடம் சேகரிக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் பயிற்சி அளிக்கவுள்ளதால், பயிற்சியாளா்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, அதற்கேற்க கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையா் சரண்யா, சாா் ஆட்சியா் (பொன்னேரி) ப.அப்துல் ராசிக், கோட்டாட்சியா்கள் எஸ்.ரவிச்சந்திரன் (திருவள்ளுா்), என்.எம்.கனிமொழி (திருத்தணி), வட்டாட்சியா்கள், நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.