திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சேவைகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சங்க உறுப்பினருக்கு நகைக் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் விஜயசக்தி.

Updated On :21 மே 2026, 7:08 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயசக்தி மேலும் தெரிவித்ததாவது:

டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித கடன்களும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சங்க உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக விவசாயிகளுக்கு படிப்படியாக விவசாயக் கடன்கள் வழங்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக சங்க உறுப்பினா் ஒருவருக்கு நகைக்கடனை அவா் வழங்கினாா்.

கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ஜீவிதா, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தயாளன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.