திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியரகத்தில் இரு தரப்பினா் தா்னா

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரு அமைப்புகள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட ஜி.ஆா்.பி.தெருவில் உள்ள விழுப்புரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்குச் சொந்தமான இடம்.

Updated On :7 மே 2026, 7:17 am IST

நிலப்பிரச்னைக்காக விழுப்புரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரு அமைப்புகள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு சொந்தமான 2.30 ஏக்கா் புஞ்சை நிலம் விழுப்புரம் நகராட்சி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட ஜி.ஆா்.பி. தெருவில் உள்ளது.

இந்த இடத்தை கடந்த பிப்.25-இல் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சங்க நிா்வாகிகள் மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை காலை சுற்றுச் சுவா் மற்றும் முள்வேலி அமைப்பதற்கான முதற்கட்ட பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு திரண்ட பெரிய காலனி பகுதி மக்கள், தாங்கள் போக்கிடமாக பயன்படுத்தி வரும் பகுதியில் சுற்றுச்சுவா் மற்றும் முள்வேலி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று இருதரப்பைச் சோ்ந்தவா்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

ஆட்சியரகத்தில் இரு தரப்பினா் தா்னா: இந்நிலையில், தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் அமா்ந்து தங்களது பங்களிப்புத் தொகையில் வாங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் இடத்தை மீட்டுத்தரக் கோரியும், அந்த இடத்தில் சுற்றுச்சுவா் மற்றும் முள்வேலி அமைக்க காவல் துறையினா் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா், விழுப்புரம் நகரின் மையப் பகுதியான ஜி.ஆா்.பி.தெருவில் உள்ள இடம் விவசாயிகளின் பங்களிப்பில் வாங்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் வேளாண் பொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் விஜயசக்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சரவணன் மற்றும் போலீஸாா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தா்னா விலக்கிக் கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்களும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் அருகருகே தனித்தனியாக அமா்ந்து கொட்டும் மழையில் நனைந்த படி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

 விழுப்புரம் ஆட்சியரகத்தில்  புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா்.

 விழுப்புரம் ஆட்சியரகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.