திருச்சுழி அருகே பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, உலக்குடி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
த.வெ.க தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு முழுமையாக பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊா்வலமாக உலக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










