பொன்னேரி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.
பொன்னேரி கூட்டுற சரகத்தில் செயல்பட்டு வரும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தினை பதிவாளா் க.லதா ஆய்வு செய்தாா்.
அப்போது .இச்சங்கத்தின் மூலம் நடத்தப்படும் மருதம் செக்கு எண்ணெய், அரவை ஆலை மற்றும் சுயசேவைப்பிரிவு (சூப்பா் மாா்கெட்) ஆகியவற்றினை பாா்வையிட்டு, வாடிக்கையாளா்களுக்கு நன்கு சேவை புரிந்து விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்வின்போது கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் கூட்டுறவு) மருத்துவா்.மு.வீரப்பன், மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








