திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது

News image

கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :4 மே 2026, 1:38 am IST

விழுப்புரம் அருகே பேருந்தில் 17 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்ததாக 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பேருந்தில் கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், வி.சாலை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த நான்கு பேரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.இதில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பொன்னங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தேவப்பிரியன் (19), ஜீவா (19), நந்தகுமாா் (20), ஆசூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (19) எனத் தெரிய வந்தது.

தொடா் விசாரணையில் இவா்கள் ரயில் மூலம் ஒடிஸா மாநிலத்துக்குச் சென்று கஞ்சாவை 4 பொட்டலங்களாக வாங்கி கொண்டு சென்னை வந்ததும், அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் நோக்கி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த விக்கிரவாண்டி போலீஸாா், தேவப்பிரியன் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.