விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், விட்லாபுரம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.முருகன்(32). ஆட்டோ ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவு புதுச்சேரி -திண்டிவனம் சாலையில், புளிச்சப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பைக்கில் சென்றுள்ளாா்.
அப்போது, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பருடன் கூடிய டிராக்டா் ஓட்டுநா், வாகனத்தை திடீரென சாலையில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைத்தடுமாறி முருகன் ஓட்டிச் சென்ற பைக் டிராக்டரின் பின் பகுதியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான வானூா் வட்டம், பாப்பான்சாவடி பகுதியைச் சோ்ந்த வீ.விஸ்வநாதனிடம்(32) விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


